நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விநாயகர் சிலை

55பார்த்தது
நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விநாயகர் சிலை
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் விநாயகர் சிலை ஒன்று இருந்தது. கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே ஆவின் பாலகம் செயல் பட்டு வருகிறது. இந்த பாலகம் முன்பு இன்று (செப்.,6) காலை ஒரு அடி உயரம் உள்ள விநாயகர் சிலை ஒன்று இருந்தது.

இதைப் பார்த்த அங்குள்ள ஊழியர்கள் நேசமணி நகர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸ் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விநாயகர் சிலையை அங்கு வைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் அந்த விநாயகர் சிலையை இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர் மற்றொருவருக்கு வழங்கி உள்ளதாக தெரிய வந்தது. அவர் அந்த விநாயகர் சிலையை நேற்று (செப்.,5) ஆவின் பாலகத்திற்கு வெளியே வைத்துவிட்டு பேசிக் கொண்டிருந்ததாகவும், அதன் பிறகு அந்த சிலையை எடுக்க மறந்து சென்று விட்டார் என்பதும் தெரியவந்துள்ளது.

உடனே சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு போலீசார் பேசினார்கள். அவர் விநாயகர் சிலை வாங்க வருவதாக கூறினார். ஆனால் போலீசார் மற்றும் அதிகாரிகள் அந்த சிலையை உடனடியாக அங்கிருந்த மாற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். இதை அடுத்து கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் விநாயகர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி