நாகர்கோவில் ரயில் நிலையம் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்திற்கு கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்திலிருந்து தினமும் 50- க்கும் மேற்பட்ட ரயில்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதிக வருமானம் கிடைத்துவரும் ரயில் நிலையங்களில் நாகர்கோவில், கோட்டாறு ரயில் நிலையமும் ஒன்றாகும்.
இந்த ரயில் நிலையத்தில் தற்போது விரிவாக்க பணிகள் கடந்த இரு வருடங்களாக நடந்து வருகிறது. கூடுதலாக தண்டவாளங்கள் அமைக்கும் பணி, யார்டு அமைக்கும் பணி, சுரங்கப்பாதை அமைக்கும் பணி, ரயில் நிலையம் முன்பு பார்க்கிங் வசதி, பிளாட்பாரங்களில் இருக்கையில் அமைக்கும் பணி, பிளாட்பாரங்களில் உள்ள மேற்கூரைகளை மாற்றி புதியதாக மேற்கூரைகள் அமைக்கும் பணி என பல்வேறு அபிவிருத்தி பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் திருவனந்தபுரம் கோட்ட மேலாளர் மனிஷ் தயாயாங் இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வந்து கோட்டார் ரயில் நிலையத்தில் நடந்தது வரும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.