மூங்கில்விளை கிணற்றில் மிதந்த முதியவர் பிணம்

599பார்த்தது
மூங்கில்விளை கிணற்றில் மிதந்த முதியவர் பிணம்
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே ஊற்றுக்குழியை சேர்ந்தவர் ஜெபமணி(71). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கடந்த 15 வருடம் முன்பு இவரது மனைவி இறந்து விட்டார். இதனால் ஜெபமணி மணவாளக்குறிச்சி அருகே மூங்கில்விளையில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார். அடிக்கடி ஊரான ஊற்றுக்குழிக்கும் சென்று வருவார். நேற்று முன்தினம் மூங்கில்விளை உறவினர் வீட்டிலிருந்த ஜெபமணி திடீரென காணாமல் போனார். உடனே உறவினர் வீட்டினர் அவரை அக்கம்பக்கம் மற்றும் ஊற்றுக்குழி சென்றும் தேடினர். ஆனால் ஜெபமணி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை மூங்கில்விளை கிணற்றில் ஒரு ஆண் பிணம் மிதப்பதை அறிந்த பொதுமக்கள் மணவாளக்குறிச்சி போலீசுக்கும், குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று கிணற்றிலிருந்து பிணத்தை மீட்டு கரை சேர்த்தனர். பின்னர் அது மாயமான ஜெபமணி என தெரிய வந்தது. விசாரணையில் ஜெபமணி வாழ்க்கையில் வெறுப்படைந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி