மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஒரு நாள் சுற்றுலா பயணம்.

1073பார்த்தது
கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத்துறையின் சார்பில் மாற்றுத்திறன் சிறார்களுக்கான ஒரு நாள் சுற்றுலா பயணத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. பாலசுப்பிரமணியம் அவர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து இன்று (07. 03. 2024) துவக்கி வைத்தார்கள்.
தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழம் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களை மகிழ்விக்க ஒரு நாள் கல்வி சுற்றுலா அழைத்துச்செல்லும் சிறப்பு திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளி குழந்தைகளை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லும் போது அவர்களின் மனஅழுத்தம் குறைந்து புத்துணர்ச்சியும் மன மகிழ்வும் ஏற்படும். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் மாற்றுத்திறனுடைய 60 இளம் சிறார்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் ஒரு நாள் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டது. இவ்ஒரு நாள் கல்வி சுற்றுலாவில் ECO Park, விவேகானந்தர் பாறை, அரசு அருங்காட்சியகம், திரிவேணி சங்கமம், மீன் அருங்காட்சியகம், சூரிய அஸ்தமன பகுதி, காட்சி கோபுரம் ஆகிய சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி