பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய மதிமுகவின் விண்ணப்பம் தொடர்பாக 2 வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்ககோரிய வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மதிமுகவின் மனு மீது உரிய முறையில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் விளக்கம் விளக்கமளித்துள்ளது.