கருங்கல் அருகே நர்ஸ் வீட்டில் திருட்டு

81பார்த்தது
கருங்கல் அருகே நர்ஸ் வீட்டில் திருட்டு
கருங்கல் அருகே கம்பிளார் வட்ட விளை பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜஸ்டின் (56)இவர் பர்னிச்சர் கடை வந்து ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வெளிநாட்டில் நர்சாக பணியில் உள்ளார்.   இவரது மகள் நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வருகிறார்.

       இந்த நிலையில் நேற்று முன்தினம்  இரவு ஜாண் ஜஸ்டின் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் திரும்பி வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள்  பீரோவில் இருந்த 5 ஆயிரம் பணம் மற்றும் பொருட்களை  திருடி சென்றுள்ளனர்.  

     மேலும் பீரோ சாவி யையும் கொள்ளையன்  எடுத்து சென்று விட்டான். இது குறித்து கருங்கல் போலீசில் ஜாண் ஜஸ்டின் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :