திருவட்டாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பிடி ஓ - வாக இருந்தவர் செய்யது உசேன். இவர் பெண் பணியாளர்களிடம் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பான ஒட்டுமொத்த புகாரின் பேரில் அவர் மீது விசாரணை நடைபெற்றது. உடனடியாக நடவடிக்கை எடுக்க ஊர வளர்ச்சி துறை இயக்குனர் உத்தரவிட்டதை தொடர்ந்து, செய்யது உசேன் மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார்.
அங்கும் பாலியல் தொந்தரவு புகார் எழுந்தது. இதற்காக இரவு நேரத்திலும் அலுவலகத்தில் தங்கி உள்ளார். இவை அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் அங்கிருந்து பத்து நாட்களில் ராஜாக்கமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக மாதர் சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் இடம் புகார் தெரிவித்தனர். பாலியல் புகார் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காமல் அவரை பாதுகாக்கும் வகையில் இடம் மாறுதல் செய்யப்பட்டது என்று புகார் இருந்தது.
தொடர் விசாரணையின் பேரில் மாவட்ட கலெக்டர் அழகு மீனா அவரை பணியில் இருந்து விடுப்பு செய்துள்ளார்.