உலக சுற்றுசூழல் தினம் முன்னிட்டு ஆப்தமித்ரா பேரிடர் கால நண்பர்கள் சார்பில் புதுக்கடை அருகே அம்சி உயர் நிலை பள்ளியில் மரம் நடும் விழா நடைபெற்றது.
கிள்ளியூர் தாலுகா ஒருங்கிணைப்பாளர் ராஜ ஸ்டீபன் தலைமை வகித்தார். மாநில உரிமைகள் கழக மாநில அமைப்பாளர் டேவிட் குமார் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக புதுக்கடை காவல் ஆய்வாளர் முத்து கலந்துகொண்டார்.
அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் மெர்லி சுற்றுச்சூழலின் அவசியத்தை பற்றி விளக்கினார். அம்சி உயர்நிலைப்பள்ளி தாளாளர் முகுந்தன் நாயர், பைங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் விஜயராணி , முஞ்சிறை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மாஸ்டர் மோகன், ஆப்தமித்ரா பேரிடர் கால நண்பர்கள் ராஜ ஸ்டீபன், ஜெகன் ராஜ், சேகர், பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி, அம்சி நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.