கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட 17 வது வார்டு தேரிவிளை சாலை கடந்த 25 ஆண்டுகளாக சீரமைக்காமல் பழுதடைந்து காணப்பட்டது. இந்த சாலையை சீரமைக்க பேரூராட்சி தலைவர் சரளா கோபாலிடம் தேரிவிளை பகுதி பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், தமிழக அரசு நிதியில் இருந்து சுமார் 44 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து பணி தொடங்கப்பட்டது.
இந்த பணியினை இன்று(அக்.30) சரளா கோபால் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் பி கோபால் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.