இன்றைய தினம் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் (காமராஜ் பவன்) பல தடைகளையும் தாண்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. கு. செல்வப் பெருந்தகை அவர்களால் இன்று குழித்துறையில் திறக்கப்பட்டது. குமரி மே. மாவட்ட காங் அலுவலகம் திறப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு திரு. ராஜேஷ்குமார், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் திரு. பிரின்ஸ் மற்றும் அதை கட்டி முடித்த குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. பினுலால் சிங், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கட்டிட பணிக்குழு உறுப்பினர்கள். நிகழ்வில் பாராளுமன்ற, சட்டமன்ற, மாநில மாவட்ட, வட்டார, நகர, வார்டு, பஞ்சாயத்து, பொதுமக்கள் முன்னிலையில் அலுவலகம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.