பாரில் குழாய் தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்றதாக புகார்

67பார்த்தது
குமரி மாவட்டம் நித்திரவிளை சந்திப்பில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அரசு டாஸ்மாக் மது கடை இயங்குகிறது. இந்த கடையுடன் மதுபாரும் உள்ளது. இங்கு மது குடிக்க வரும் குடிமகன்களுக்கு பாட்டில் தண்ணீர் மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

      ஒரு பாட்டில் தண்ணீர் ரூபாய் 15 வரை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாட்டிலில் தெரு குழாய் தண்ணீரை நிரப்புவதை பொதுமக்கள் சிலர் கையும் களவுமாக படித்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

     இந்த வீடியோ தற்போது வைரலாசிவருகிறது. இது சம்பந்தமாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி