கேரளாவுக்கு கடத்திய 1750 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்.

64பார்த்தது
கேரளாவுக்கு கடத்திய 1750 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்.
குமரி மாவட்டத்தில் மீன்பிடி தொழில் செய்ய அரசு சார்பில் பைபர் படகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயை வியாபாரிகள் வாங்கி கேரளாவுக்கு சட்ட விரோதமாக கடத்தி சென்று விற்பனை செய்வது தொடர் கதையாக உள்ளது.

       இந்த நிலையில் நேற்று கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் தாமஸ் மற்றும் போலீசார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மஞ்ச தோப்பு பகுதியில் கேரளாவை நோக்கி சென்ற மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர்.  
       அப்போது படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 50 கேன்களில் மொத்தம் 1750 லிட்டர் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் பிடிபட்ட வாகனத்தையும்,   மண்ணெண்ணெயையும் கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

டேக்ஸ் :