குமரி சுற்றுச்சூழல் பூங்காவை 14 லட்சம் பேர் பார்வையிட்டனர்.

578பார்த்தது
குமரி சுற்றுச்சூழல் பூங்காவை 14 லட்சம் பேர் பார்வையிட்டனர்.
புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் பெரும்பாலும் பழத்தோட்டத்தில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் பூங்காவை பார்வையிடுவது வழக்கம். இந்த பூங்கா கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ந் தேதி திறக்கப்பட்டது. இந்த சுற்றுச்சூழல் பூங்காவை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கிறார்கள். இங்கு சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணமாக சிறுவர்களுக்கு தலா ரூ. 10 வீதமும், பெரியவர்களுக்கு தலா ரூ. 25 வீதமும் வசூலிக்கப்படுகிறது. பூங்காவில் வீடியோ படம் பிடிக்க ரூ. 2 ஆயிரம் வீதமும், கேமரா மூலம் படம் பிடிக்க ரூ. 200 வீதமும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த பூங்காவை கடந்த ஒரே ஆண்டில் பெரிய வர்கள் 88 ஆயிரத்து 977 பேரும், சிறுவர்கள் 42 ஆயிரத்து 625 பேரும் என 1 லட்சத்து 31 ஆயிரத்து 602 பேர் பார்வையிட்டுள்ளனர். இந்த தகவலை கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை பண்ணை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி