நாகர்கோவிலில் பி. எஸ். என். எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

67பார்த்தது
பி. எஸ். என். எல். ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள பி. எஸ். என். எல். அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில் பி. எஸ். என். எல். சொத்துக்களை திருடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பி. எஸ். என். எல். சொத்துக்கள் திருடு போவதை தடுக்க வேண்டும், தேவையற்ற
பொருட்களை கையகப்படுத்தி உடனே ஏலம் விடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு ஏ. ஐ. பி. டி. பி. ஏ. சங்க மாவட்ட செயலாளர் ஜார்ஜ் தலைமை தாங்கினார். மாவட்ட உதவி செயலாளர் பழனிச்சாமி விளக்க உரையாற்றினார். தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.
பி. எஸ். என். எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுயம்புலிங்கம், தமிழ்நாடு
தொலைத்தொடர்பு ஒப்பந்த
ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபால் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் கூட்டமைப்பு செயலாளர் ராஜு, ஒருங்கிணைப்பாளர் சையது இத்ரீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியம் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி