கன்னியாகுமரி - Kanniyakumari

கன்னியாகுமரி
குழந்தைகளை பாதுகாக்கும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
Jul 12, 2024, 13:07 IST/கிள்ளியூர்
கிள்ளியூர்

குழந்தைகளை பாதுகாக்கும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

Jul 12, 2024, 13:07 IST
கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறைகளின் சார்பில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்த. விழிப்புணர்வு நிகழ்சி நடைபெற்றது.    மாவட்ட ஆட்சித்தலைவர் பி. என். ஸ்ரீதர் தலைமை வகித்தார்.        அவர் கூறுகையில், - குழந்தைகளின் நலன் காப்பதற்காக அரசு பல்வேறு சட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறது. POCSO சட்டத்தில் குற்றவாளிகளுக்கு மிக கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார்.      தொடர்ந்து ”கற்கும் வயதில் கல்யாணம் வேண்டாமே” என்ற இலட்சினையை கலெக்டர்  வெளியிட பள்ளி ஆசிரியர்கள் பெற்றுக்கொண்டார்கள். நடைபெற்ற நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர்  முனைவர். பாலதாண்டாயுதபாணி, மாவட்ட சமூகநல அலுவலர் (பொ) விஜயமீனா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சகிலா பானு,   மாவட்ட தாய் சேய் அலுவலர் துணை இயக்குநர் சுகாதார நல பணிகள்  பியூலா, ஆசிரியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.