சென்னை: ஆபாச வீடியோ விற்ற வாலிபர் அதிரடி கைது; பரபரப்பு

64பார்த்தது
சென்னை: ஆபாச வீடியோ விற்ற வாலிபர் அதிரடி கைது; பரபரப்பு
மணலி பகுதியில், 'டெலிகிராம்' செயலி வாயிலாக, சிறார் ஆபாச வீடியோக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, ஆவடி மத்திய இணைய குற்றப் பிரிவு போலீசார் சந்தேகத்தின்படி, மணலி சின்னசேக்காடு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த், 21, என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர், 'டெலிகிராம்' செயலி வாயிலாக, சிறார் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர். இயந்திரவியல், டிப்ளமோ படித்துள்ள பிரசாந்த், தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபடி, சிறார் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரிந்தது.

தொடர்புடைய செய்தி