தாங்கி குளக்கரையில் மரக்கன்று நடும் விழா

55பார்த்தது
தாங்கி குளக்கரையில் மரக்கன்று நடும் விழா
இந்தியாவில் காடுகளின் பரப்பளவு 30 சதவீதம் இருக்க வேண்டிய நிலையில், 22 சதவீதம் மட்டுமே உள்ளது. இதை அதிகப்படுத்த வேண்டி, ஜூலை மாதத்தில், வனத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, வனத் திருவிழாவின் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு சாலை, வில்லிவலம், தாங்கி கிராம குளக்கரையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

இதில், விதைகள் சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பு சார்பில், 10 அடி உயரமுள்ள ஆல மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், விதைகள் தன்னார்வ அமைப்பினருடன் பங்கேற்று தன்னார்வலர்கள் இணைந்து மரக்கன்றுகள் நட்டனர்.

தொடர்புடைய செய்தி