மயிலை- - எடற்குன்றம் சாலையோரம் மண் அணைக்க வேண்டுகோள்

76பார்த்தது
மயிலை- - எடற்குன்றம் சாலையோரம் மண் அணைக்க வேண்டுகோள்
திருப்போரூர் அடுத்த மயிலை கிராமத்திலிருந்து, எடற்குன்றம் வரை, சில மாதங்களுக்கு முன், 800 மீட்டர் தொலைவுக்கு, புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இச்சாலையின் இருபுறமும், முறையாக மண் கொட்டி அணைக்கப்படவில்லை என, மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதனால், சாலையோர சரிவில் மண் சரிந்து, தார் சாலை சேதமடைகிறது.

அதுமட்டுமின்றி, சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். லாரி மற்றும் வேன் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் எதிரே வந்தால், இருசக்கர வாகனங்களில் வருவோர் ஒதுங்கி நிற்பதற்கு கூட இடமில்லாததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, சாலையின் இரு புறங்களிலும், மண் அணைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி