சாலையில் பள்ளங்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

68பார்த்தது
சாலையில் பள்ளங்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் பல்லாயிரக்கணக் கான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், திருக்கச்சூர், பெரியார் நகர், கொளத்துார், ஆப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில், சாலை பெயர்ந்து பல இடங்களில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. வெளி ஊர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், சாலையில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல், அந்த பகுதியில் வாகனங்களை வேகமாக இயக்கி, அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மேலும், திருக்கச்சூர் பகுதியில், இந்த சாலை ஆறுவழிச் சாலையில் இருந்து இருவழிச் சாலையாக மாறுவதால், வாகனங்கள் கடக்கும்போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் காயம் அடைகின்றனர். அதுமட்டுமின்றி, சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, சாலை குறுகலாக மாறும் இடத்தில், இருபுறமும் உள்ள அணுகு சாலையில் வாகனங்கள் செல்ல, போக்குவரத்து போலீசார் தடை விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தொடர்புடைய செய்தி