தாயின் பெயரில் மரம் நடும் விழா சங்கரா பல்கலையில் துவக்கம்

67பார்த்தது
தாயின் பெயரில் மரம் நடும் விழா சங்கரா பல்கலையில் துவக்கம்
காஞ்சிபுரம் ஏனாத்துாரில் உள்ள ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹா வித்யாலயா பல்கலை நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில், 'தாயின் பெயரில்' ஒரு மரம் நடுதல் என்ற திட்டத்தின்கீழ் பல்கலை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடத்த துணைவேந்தர் சீனிவாசு, பதிவாளர் ஸ்ரீராம் ஆகியோர் அறிவுறுத்தினர்.

அதன்படி, பல்கலை தேர்வுக் கட்டுபாட்டாளர் ஸ்ரீனிவாசராவ், பசுமை குடில் மேகநாதன், பசுமைக் குழுமம் தலைவர் சுமதி ஆகியோர் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

இதில், நாட்டு நலப்பணித் திட்டத்தைச் சேர்ந்த 50 மாணவ- - மாணவியர் பங்கேற்று, தங்களது 'தாயின் பெயரில்' ஒரு மரம் நட்டனர்.

நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வினோத் வரவேற்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி