சாலையோரம் குப்பை குவியல் வல்லக்கோட்டையில் சீர்கேடு

67பார்த்தது
சாலையோரம் குப்பை குவியல் வல்லக்கோட்டையில் சீர்கேடு
ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் 1, 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு 10க்கும் மேற்பட்ட திருமண மண்ட பங்கள் உள்ளன. இந்த நிலையில், திருமண மண்டபம் மற்றும் அங்குள்ள கடைகளில் இருந்து குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில்நெடுஞ்சாலையோரங்களில் கொட்டுகின்றனர்.


இதனால், நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
காற்று வீசும்போது குப்பை சாலையில் பறப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.


மேலும், குப்பையில் இரை தேடி வரும் கால்நடைகள், திடீரென சாலையில் குறுக்கே ஒடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.


இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.


எனவே, நெடுஞ்சாலையோரங்களில் குப்பை மற்றம் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுபவர்களின் மீது சம்பந்தப்படட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி