வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 4 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா செய்யூர் எம்எல்ஏ பாபு பங்கேற்று அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வெங்கப்பாக்கம் அரசினர் மேல்நிலை பள்ளி, இப்பள்ளியில் 1336 மாணவ மாணவியர் பயில்கின்றனர் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை அதிகமாகும் நிலையில் இடம் பற்றாக்குறையின் காரணமாக கூடுதல் வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியை நளினி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாமிர்தம் ஆகியோர் பள்ளிக்கல்வித்துறைக்கும், செய்யூர் எம்எல்ஏவிடமும் கோரிக்கை வைத்தனர் அதனடிப்படையில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 94. 24 லட்சம் மதிப்பில் நான்கு வகுப்பறைகள் கொண்ட அதி நவீன புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து கட்டிட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா பள்ளி தலைமை ஆசிரியை நளினி தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு திருக்கழுக்குன்றம் சேர்மன் ஆர் டி அரசு ஆகியோர் பூமி பூஜையில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்ததுடன் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். ஜூன் மாதத்தில் மாணவர்களின் சேர்க்கை நடைபெற உள்ளதால் கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரரிடம் எம்எல்ஏ பாபு உத்தரவிட்டார்.