விஷால், ஆரோக்யா ரக தர்ப்பூசணி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

64பார்த்தது
விஷால், ஆரோக்யா ரக தர்ப்பூசணி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்
செய்யூர் வட்டத்திற்குட்பட்ட லத்துார் மற்றும் சித்தாமூர் ஒன்றியங்களில், 84 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியில், 30, 000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலம் உள்ளது.

இங்கு, 5, 000த்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், கிணற்றுப்பாசனத்தில் சொட்டு நீர் பாசன முறையில் தர்ப்பூசணி பயிரிடப்பட்டு உள்ளது.

இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் தர்ப்பூசணி, சென்னை, கேரளா, பெங்களூரு போன்ற நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

செய்யூர் பகுதியில், சாம்ராட், அபூர்வா போன்ற சாதாரண ரக தர்ப்பூசணி பயிர் செய்வதே வழக்கம். ஆனால், தற்போது விஷால், ஆரோக்யா ரக தர்ப்பூசணி பயிரிடுவதில், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இது குறித்து, விவசாயி சின்ராஜ் கூறியதாவது:

செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதியில், அதிக அளவில் தர்ப்பூசணி பயிரிடப்பட்டுள்ளது. பெரும்பாலான விவசாயிகள், சாதாரண ரக தர்ப்பூசணி பயிர் செய்து வந்தனர்.

சாதாரண ரக தர்ப்பூசணி விதையின் விலையை விட, விஷால், ஆரோக்யா ரக தர்ப்பூசணி விதையின் விலை அதிகம் என்பதால், அதை பயிர் செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டி வந்தனர்.

ஆனால், விஷால், ஆரோக்யா ரக தர்ப்பூசணியின் கொள்முதல் விலை, 12, 000 முதல் 20, 000 ரூபாய் வரை நிலையாக இருப்பதால், தற்போது அவற்றை பயிரிடுவதில், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி