தமிழக வெற்றி கழகம் சார்பில் ரத்த தான முகாம்.

68பார்த்தது
நடிகர் விஜய் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் வாலாஜாபாத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் ஏழை, எளிய மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகம் நிறுவன தலைவர் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம், உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி தலைவர் வாலாஜாபாத் பத்ரிபாலா தலைமையிலும், வாலாஜாபாத் பேரூர் தலைவர் யோகநாத் முன்னிலையில் நடைபெற்றது.

இதில், தமிழக வெற்றி கழகத்தின் வாலாஜாபாத் ஒன்றிய தலைவரும், உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி தலைவருமான எம். பத்ரிபாலா கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினார்கள்.

தொடர்புடைய செய்தி