காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
ஆடி மாதத்தில் வரும், முதல் மங்கல வார துவக்க தினத்தை முன்னிட்டு, அன்றைய தினம், மாலை 6: 00 மணி அளவில், பர்வதவர்த்தினி அம்மாளுக்கு, 108 லிட்டர் சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதில், திருமண தடை, குழந்தை பாக்கியம் பெற விரும்புவோர் பங்கேற்கலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.