13 ஏரிகளில் நீர் இருப்பு கருவி பொருத்தம்... ஜரூர்!

76பார்த்தது
13 ஏரிகளில் நீர் இருப்பு கருவி பொருத்தம்... ஜரூர்!
ஏரிகளின் நீர்மட்டம் அறியும் வகையில், முதற்கட்டமாக 13 ஏரிகளில் அளவீட்டு கருவிகள், அதற்கான நவீன அறை ஆகியவை அமைக்கப்படுகின்றன. இத்திட்டம் படிப்படியாக காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏரிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் எனவும், இதனால், ஏரி உடைப்பு, பாசனத்திற்கு தேவையான நீரின் அளவு ஆகியவற்றை அறிய முடியும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து தாலுகாக்களில், நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில், 381 ஏரிகள் உள்ளன. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய பருவ மழைக்கு இந்த ஏரிகள் நிரம்பினால், 50, 000க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் நெல் சாகுபடி செய்வர்.

இதில், தென்னேரி, உத்திரமேரூர் உள்ளிட்ட சில முக்கியமான ஏரிகளில் மட்டுமே, ஏரி நீரின் இருப்பு விபரங்களை அளவீடு செய்ய முடிகிறது. பிற ஏரிகளில், நீர் மட்டத்தின் அளவு தெரிந்துக்கொள்ள முடியவில்லை. இதனால், பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்குமா என, விவசாயிகள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது.

இந்த சிரமத்தை தவிர்க்கும் விதமாக, அனைத்து ஏரிகளிலும் நீரின் இருப்பு விபரத்தை தெரிந்துக்கொள்ளும் விதமாக, டிஜிட்டல் அளவீடு செய்யும் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இந்த கருவி, ஏரி நீரின் அளவை பதிவு செய்து, செயற்கைக்கோளுக்கு அனுப்பி வைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி