கணவர் கண்ணெதிரே விபத்தில் மனைவி பலி

53பார்த்தது
கணவர் கண்ணெதிரே விபத்தில் மனைவி பலி
சேலையூர் அடுத்த சந்தோஷபுரத்தைச் சேர்ந்தவர் அமுதா, 40. இவரது கணவர் வசந்தகுமார். இருவரும், நேற்று முன்தினம் 'ஸ்பிளென்டர் பிளஸ்' என்ற பைக்கில், தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி சாலை வழியாக, சந்தோஷபுரம் நோக்கி சென்றனர்.

காமராஜபுரம் 'டாஸ்மாக்' எதிரே சென்றபோது, ஹோண்டா 'டியோ' வாகனத்தில் வந்த இருவர், தம்பதி சென்ற வாகனத்தின் மீது மோதினர்.

இதில், பின்னால் அமர்ந்திருந்த அமுதா, கீழே விழுந்ததில் தலையின் பின்புறத்தில் பலத்த காயமடைந்தார்.

அங்கிருந்தவர் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரியவந்தது. விபத்து ஏற்படுத்திய மர்ம நபர்கள் குறித்த விபரம் தெரியவில்லை.

இது தொடர்பாக, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி