தமிழக நிறுவனம் தயாரித்த ரிசெபில் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

70பார்த்தது
தமிழக நிறுவனம் தயாரித்த இந்தியாவின் முதல் ரிசெபில் ராக்கெட் இன்று (ஆக.,24) காலை விண்ணில் பாய்ந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடங்தையில் இந்தியாவின் முதல் ரியூசபில் ஹப்பிரிட் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்டார்ப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன் இந்தியா மார்ட்டின் குழுமத்துடன் இணைந்து மறு பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மிஷரூமி 2024 திட்டத்தின் கீழ் ரூமி 1 என்ற ராக்கெட் உருவாகியுள்ளது.

இதுவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ரீயூசபில் ஹைப்ரிட் ராக்கெட் ஆகும் மூன்று சோதனை செயற்கை கோள்களுடன் இந்த ராக்கெட் இன்று (ஆக.,24) காலை லான்சர் மூலம் விண்ணில் ஏவப்பட்டது 3. 5 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் வானில் 80 கிலோமீட்டர் உயரம் பறக்ககூடிய திறன் உடையதாகும். மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டால் ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி பலமுறை செயற்கைக்கோளை ஏவலாம். இதனால் செலவும் மிச்சமாகும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி