அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நன்னீராட்டு பெருவிழா

69பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் முற்காலத்தில் சோழவந்தபுரம் என்று அழைக்கப்பட்டு தற்போது சோகண்டி என அழைக்கப்படும் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மீனாட்சியம்மன் உடனுறை அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இருந்தது மிகவும் பழமை வாய்ந்த கோவில் மிகவும் சிதிலமடைந்து வழிபாடு இல்லாமல் இருந்த நிலையில் ஊர் மக்கள் உதவியினாலும் ஆன்மீக அன்பர்களின் உதவியினாலும் இக்கோவிலை திருக்கைலாயர் மரபு மெய்கண்டார் வழி பேரூர் ஆரினம் 25 ஆம் பட்டர் கயிலைப் புனிதர் சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் ஆலோசனையின் பேரில் புனரமைக்க முடிவு செய்து திருக்கோவில் பணிகள் நடைபெற்றது கோவில் புணரமைக்கும் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விநாயகர் பூஜையுடன் பல்வேறு வேள்விகள் துவங்கி நேற்றைய தினம் இரண்டாம் கால யாக பூஜையுடன் உலக நன்மைக்காக பல்வேறு வேள்விகள் முடிவுற்று இன்று காலை மூன்றாம் கால யாக பூஜை நிறைவுற்று தமிழ் வழியில் திருவாசகம் முற்றோதல் முடிந்து யாகசாலையில் உள்ள புனித நீர் உள்ள கலசத்தை சிவாச்சாரியார்கள் கொண்டு சென்று கோபுர விமானத்திற்கும் மீனாட்சி அம்மனுக்கும் மூலவர் அருள்மிகு சுந்தரேஸ்வரர் சுவாமிக்கும் புனித நீரை ஊற்றி திருநெறிய தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி