தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

76பார்த்தது
தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
காஞ்சிபுரம் அடுத்த பழைய சிறுகாவேரிபாக்கம் கிராமத்தில் தீப்பாஞ்சி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு மே 26ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து தினமும் மண்டலாபிஷேகம் நடந்து வந்தது, நிறைவு நாளான நேற்று, மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம், காலை 6: 30 மணிக்கு சதீஷ்குமார் சிவாச்சாரியார் தலைமையில், சிறப்பு பூஜை, மஹா கணபதி ஹோமம், கலச ஆராதனை, சிறப்பு அபிஷேகம் நடந்தது.

காலை 10: 00 மணிக்கு பால் குடம், சிறப்பு அபிஷேகம், கலசாபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. பிற்பகல் 1: 00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்தலும், இரவு 7: 30 மணிக்கு அம்மன் வீதியுலாவும், இரவு 10: 00 மணிக்கு மந்தவெளி அம்மன் நாடக மன்றத்தினரின் கட்டை கூத்து நாடகம் நடந்தது.

நேற்று, காலை 9: 00 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், கலசாபிஷேகம், மலர் அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது.

தொடர்புடைய செய்தி