செங்கல்பட்டில் நடைபெற்ற ஜமாபந்தி ஆட்சியர் பங்கேற்பு

59பார்த்தது
செங்கல்பட்டில் நடைபெற்ற ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றார்


ஜமாபந்தி, ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால் கிராமந்தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த தணிக்கை முறையாகும்
இந்த வருவாய் தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிருவாக அலுவலர் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு வருவாய் ஆட்சியர் அலுவலகத்தில் 1433 -ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் தலைமையில் நடைபெற்றது

இந்த வருவாய் திருவாயத்தில் செங்கல்பட்டு வட்டத்திற்கு உட்பட்ட 26 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 145 மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்களின் மீது உடனடி தீர்வு எடுக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக தனியார் நிதி மூலம் ஒரு மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு செயற்கை கால் மற்றும் 2 பயனாளிகளுக்கு காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவிகளை மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய்ய அலுவலர் அருண் ராஜ் அவர்கள் வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி