திருப்போரூரில் நடைபாதை கடைகள் அகற்றும் பணி தீவிரம்

85பார்த்தது
திருப்போரூர் கந்தசாமி திருக்கோவிலில் பக்தர்களின் நலன் கருதி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் திருக்கோயிலை சுற்றி நான்கு மாட வீதிகளிலும் இருந்த நடைபாதை கடைகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அதிரடியாக அகற்றப்பட்டது.


செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது, குறிப்பாக விசேஷ நாட்களில் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர் கோயிலை சுற்றி நான்கு மாட வீதிகளிலும் நடைபாதை கடைகள் அமைத்திருப்பதால் விழா நாட்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர், இதனை கண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உடனடியாக நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜிற்கு ஆலோசனை வழங்கினார் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் உத்தரவின் பேரில் கந்தசாமி திருக்கோயில் செயல் அலுவலர் குமரவேல் முன்னிலையில் நான்கு மாட வீதிகளிலும் இருந்த நடைபாதை கடைகள் இன்று வருவாய்த்துறை மற்றும், காவல்துறையினர் உதவியுடன் கோயில் நிர்வாகத்தால் அதிரடியாக அகற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி