மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்

81பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இரும்பேடு காட்டு தேவாத்தூர் நீர் பெயர் தொன்னாடு முதுகரை தேவத்தூர் காவாத்தூர் மாரிபுத்தூர் அருங்குணம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பெரும்பாக்கம் ராஜசேகர் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்பொழுது பொதுமக்கள் அதிமுக வேட்பாளருக்கு மலர் தூவி ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்பொழுது காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் அவர்கள் முதுகரை பகுதியில் பேசுகையில் என்னை காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அறிவித்த பின்பு பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவித்திருந்தேன் அந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு இதுவரை 5000க்கும் மேற்பட்ட குறைகள் புகாராக வந்துள்ளது. நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பின் நான் அறிவித்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு வரப்பட்ட புகார்கள் உடனடியாக தீர்க்கப்படும் என பொதுமக்களிடம் பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி