"பள்ளம் எடுத்து பாதியில் நிறுத்திய பணியால் வாகன நெரிசல்

63பார்த்தது
"பள்ளம் எடுத்து பாதியில் நிறுத்திய பணியால் வாகன நெரிசல்
மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை உள்ள, ஆறு வழி சாலையான ஓ. எம். ஆர். , 20 கி. மீ. , துாரம் கொண்டது. இந்த சாலையில், மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. இதற்காக, சாலையின் இருவழி பாதையை அடைத்து, பக்கவாட்டில் உள்ள, தலா, 15 அடி அகலம் கொண்ட அணுகு சாலையை சேர்த்து, சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. இருந்தும், பணிக்காக தோண்டும் பள்ளம் மற்றும் அணுகு சாலையில் மைய தடுப்பை அகற்றியபின், முறையாக சீரமைக்காமை போன்ற காரணத்தால், வாகன நெரிசல் அதிகரிக்கிறது. குறிப்பாக, சோழிங்கநல்லுார் நான்கு வழி சந்திப்பில், எப்போதும் நெரிசல் அதிகமாக இருக்கும். இங்கு, துரைப்பாக்கம் நோக்கி செல்லும் சாலையில், டாலர் சந்திப்பு அணுகு சாலையில், பத்து நாட்களுக்குமுன், மின் இணைப்புக்காக பள்ளம் எடுக்கப்பட்டது. போலீசாரிடம், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில், இரவு நேரத்தில் பணி செய்யும் வகையில், எல். அண்ட். டி நிறுவனம் அனுமதி வாங்கியது. ஆனால், ஒரே நாளில் பள்ளம் தோண்டிவிட்டு, கேபிள் பதிக்காமல் பணியை பாதியில் நிறுத்தினர். இந்த நிலையில், ஐந்து நாட்களுக்குமுன், ஓ. எம். ஆர். , டாலர் சந்திப்பின், ‛யு-டர்ன்' இடம் மாற்றி அமைக்கப்பட்டது. அங்கு, அணுகு சாலை அகலமாக இருந்தால் தான் வாகனங்கள் எளிதில் திரும்பி செல்லும். பள்ளம் தோண்டிய பணியை பாதியில் நிறுத்தியதால், பீக்கவர்ஸ் நேரத்தில் நெரிசல் அதிகரிக்கிறது. மேலும், அங்கு மழையில் சேதமடைந்த சாலை, அபாய பள்ளமாக மாறி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி