தொகுதி ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு அலுவலர் பற்றாக்குறை

71பார்த்தது
தொகுதி ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு அலுவலர் பற்றாக்குறை
காஞ்சிபுரம் -- தனி லோக்சபா தொகுதியில், தேர்தல் ஊழியர்கள் பற்றாக்குறையால், ஓட்டுச்சாவடிகளில் தலா ஒரு ஊழியர் தவிர்க்கப்பட்டுள்ளார்.

இத்தொகுதியில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் காஞ்சிபுரம், உத்திரமேரூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் -- தனி, செய்யூர் -- தனி ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.

லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, வரும் 19ம் தேதி நடக்கிறது. இதையடுத்து, தேர்தல் ஆணையம், அரசுப் பள்ளிகளில், ஓட்டுச்சாவடிகள் அமைப்பது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் அளிப்பது, மண்டல அலுவலர்கள், ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் பிற ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால், ஓட்டுச்சாவடி ஊழியர்களில், ஒரு ஊழியர் தவிர்க்கப்பட்டுள்ளார்.

ஓட்டுச்சாவடியில், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுப்பதிவு அலுவலர்கள் 1, 2, 3 என, தலா நான்கு பேர் நியமிக்கப்படுவர்.

இத்தேர்தலில், ஓட்டுப்பதிவு மூன்றாம் அலுவலர் தவிர்க்கப்பட்டுள்ளார்.

வாக்காளர் அடையாள ஆவணத்தை சரிபார்த்து, அவரது வாக்காளர் எண், பாகம் எண் உள்ளிட்ட விபரங்களை படிவத்தில் பதிந்து, கைவிரலில் மையிட்டு, ஓட்டளிக்க, 1, 2 அலுவலர்கள் ஏற்பாடு செய்வர். மூன்றாம் அலுவலர், மின்னணு இயந்திரத்தை இயக்கி, ஓட்டளிக்க அனுமதிப்பார்.

தொடர்புடைய செய்தி