மறைமலை நகரில் தாவீகா நிர்வாகி அமைத்த நிழற்குடை அகற்றம்

52பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட மல்ராசாபுரம் பகுதியில் பிரபல தனியார் பெண்கள் கல்லூரி அமைந்துள்ளது. 

சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் இருந்து கரு நீலம் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள கல்லூரியின் வாசலில் தமிழக வெற்றிக் கழக மறைமலைநகர் நகரச் செயலாளர் ஜோசப் சார்பில் பேருந்து நிழல் கூடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிழல்குடையை அமைக்க முறையாக காவல் நிலையத்திலும் மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்திலும் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் மறைமலைநகர் நகராட்சி சார்பில் தனியார் பெண்கள் கல்லூரி அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த நிழல்குடையை ஜேசிபி இயந்திரம் இடித்து அகற்றினர். 

பின்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அங்கு நின்றுகொண்டிருந்த மறைமலைநகர் நகராட்சி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. சம்பவம் குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, தனியார் பெண்கள் கல்லூரி அருகாமையில் உள்ளதால் மறைமலைநகர் காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும். 

அதேபோல நகராட்சி அலுவலகத்திலும் முறையாக அனுமதி பெற வேண்டும். எனவும் அவர்கள் அனுமதி பெறாததால் தற்காலிக இயக்க நிலை பெறக்கூடிய இடித்து அகற்றினோம் என தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி