கடமலைப்புத்துாரில் ராமானுஜரின் 1, 007ம் ஆண்டு அவதார பெருவிழா

83பார்த்தது
கடமலைப்புத்துாரில் ராமானுஜரின் 1, 007ம் ஆண்டு அவதார பெருவிழா
அச்சிறுபாக்கம் அடுத்த சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடமலைப்புத்துார் ராமானுஜர் கூடத்தில், ராமானுஜரின் 1, 007வது பிறந்த நாள் வைகாசி திருவாதிரை நட்சத்திர பெருவிழா நேற்று நடந்தது.

கடமலைப்புத்துாரில் உள்ள ராமானுஜர் கூடத்தில், 27வது ஆண்டாக ராமானுஜர் சன்னிதியில் பால், தயிர், பன்னீர், இளநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.

மூலவர் சன்னிதியில் உற்சவரான ராமானுஜருக்கு பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடினர். சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, இரவு ராமானுஜர் புஷ்ப அலங்காரத்துடன் பாகவத உத்தமர்களால் நாம சங்கீர்த்தணம் திருவீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி