கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் போராட்டம்

574பார்த்தது
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் போராட்டம்
சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கோயம்பேடில் இயங்கி வந்த புறநகர் பேருந்து நிலையம், கடந்த 30ம் தேதி முதல் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதிக்கு மாற்றப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி சர்வீஸ் சாலை அருகே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வரும் பேருந்துகள், ஜி. எஸ். டி சர்வீஸ் சாலை வழியாக இயக்கப்படுவதால், விபத்து அபாயம் ஏற்படும் என்று கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சர்வீஸ் சாலையில் டூவீலர் போக தடை விதித்திருப்பதால், அப்பகுதி மக்கள் வண்டலூர் மேம்பாலம் வரை சென்று, சுற்றி வர உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது, தகவலறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக வைத்தனர்.

தொடர்புடைய செய்தி