காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கு முன்பாக தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு மற்றும் வேட்பு மனு வாபஸ் பெறுதல் என பல்வேறு நிகழ்வுகளுக்கு பின் இறுதியாக திமுக , அதிமுக , பாமக நாம் தமிழர், கட்சி பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் எட்டு சுயேச்சை உறுப்பினர்கள் என மொத்தம் 11 நபர்கள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் இறுதி கட்டத்தில் போட்டியிட்டனர்.
இந்நிலையில் வாக்குப்பதிவு எண்ணிக்கை துவங்கி ஒவ்வொரு சுற்றுகளாக 32 சுற்றுகள் வரை நடைபெற்றது. இறுதியில் திமுக வேட்பாளர் செல்வம் ஐந்து லட்சத்து 86 ஆயிரத்து 044 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 3 லட்சத்து 64 ஆயிரத்து 571 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்தோஷ் குமார் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 272 வாக்குகளும், பாமக வேட்பாளர் ஜோதி ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 931 வாக்குகளும் பெற்றனர்.
இந்த நான்கு வேட்பாளர்களைத் தவிர ஐந்தாவது ஆக ஐந்து இலக்கத்தில் வாக்குகள் பெற்றது நோட்டா வாகும். இந்தத் தேர்தலில் நோட்டாவிற்கு 16, 965 வாக்குகள் கிடைத்துள்ளது.