அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் எம்பி நன்றி தெரிவித்தார்

53பார்த்தது
அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மொறப்பாக்கம், தண்டலம், தண்டரைப்பேட்டை, வேடந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்
காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் அவர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த இந்தியா கூட்டணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஒன்றிய கழகச் செயலாளர் ஜி. தம்பு தலைமையில் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் அவர்களுக்கு பொதுமக்கள் திருஷ்டி எடுத்தும், இனிப்புகள் வழங்கியும், மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும், கேக் வெட்டியும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி