புறம்போக்கு இடத்தை பத்திரப்பதிவு செய்து முறைகேடு

81பார்த்தது
புறம்போக்கு இடத்தை பத்திரப்பதிவு செய்து முறைகேடு
சித்தாமூர் ஊராட்சியில் மதுராந்தகம் - சூணாம்பேடு சாலையோரத்தில், முத்தாலம்மன் கோவில் அருகே குட்டை உள்ளது.

தனிநபர்கள் சிலர், இரண்டு தினங்களுக்கு முன், இரவு நேரத்தில் குட்டையில் மண் கொட்டி நிரப்புவதை கண்ட அப்பகுதி மக்கள், 'குட்டையில் ஏன் மண் கொட்டி நிரப்புகிறீர்கள்' என கேட்டுள்ளனர்.


அதற்கு அவர்கள், 'இது எங்களுக்கு சொந்தமான இடம்; முறையாக பத்திரப்பதிவு செய்து, தற்போது நாங்கள் சீரமைக்கிறோம்' என தெரிவித்தனர். குட்டையில் மண் கொட்டி நிரப்புவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, மண் நிரப்புவது நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, கிராம மக்கள் சார்பாக, முத்தாலம்மன் கோவில் அருகே, சாலையோரத்தில், 14 சென்ட் அளவுடைய கிராம நத்தம் புறம்போக்கு இடத்தை, தனிநபர்கள் சிலர் முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக, செய்யூர் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

வருவாய்த்துறை 'அ' பதிவேட்டில், அந்த இடம் கிராம நத்தம் வகைப்பாட்டில் உள்ளது. வீடுகட்டி வசித்து வருவோருக்கு மட்டுமே, கிராம நத்தத்தில் பட்டா வழங்குவது விதிமுறை.

ஆகையால், நீர்நிலை குட்டையாக உள்ள இந்த இடத்திற்கு பட்டா வழங்க வாய்ப்பு இல்லை. தனிநபர்கள் முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக, கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

டேக்ஸ் :