செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியை அகற்ற கோரி மணு

71பார்த்தது
செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியை அகற்ற கோரி தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மணு

செங்கல்பட்டு வட்டாச்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது

இந்த நிகழ்வில் சிங்கபெருமாள்கோவில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜிடம் மனு வழக்கினர் அந்த மனுவில் இந்திய ஒன்றியத்தினுடைய தலைமை கணக்காயர் தகவலின் படி 2019-ல் காலாவதியான செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடி தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக மக்கள் பணம் 28 கோடி ரூபாயை கட்டணமாக சுரண்டப்பட்டதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. காலாவதியான சுங்கச்சாவடியை பொருத்தமட்டில் 40 சதவீத கட்டணம் மட்டுமே பராமரிப்புக்காக வசூல் செய்ய வேண்டும் என்பது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உடைய விதி அந்த விதியை இவர்கள் பின்பற்றுவது இல்லை. முற்றிலும் கலெக்சன் ஏஜென்ட் மட்டுமே அமர்ந்து கொண்டு வாகனங்களுக்கான பணத்தை மட்டும் வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள். என்பது யாவரும் அறிந்த உண்மை ஆகவே நமது மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்தில் பரனுர் சுங்கச்சாவடி இருப்பதினால் நமது மாவட்ட ஒட்டுமொத்த அரசு நிர்வாகங்களுக்கும் அவப்பெயரை தேடி கொடுக்கக்கூடிய நிலை உள்ளது.

தொடர்புடைய செய்தி