கோனேரிகுப்பம் சாலை சீரமைப்பு பணி கிடப்பில்

56பார்த்தது
கோனேரிகுப்பம் சாலை சீரமைப்பு பணி கிடப்பில்
காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, வேந்தன் நகர் பிரதான சாலையில், மக்கள் பயன்பாட்டிற்கான சாலை உள்ளது.

இச்சாலையை சாய்பாபா கோவில், ரமணா அவென்யூ மற்றும் விரிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வோர் பயன்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக, சாய்பாபா கோவில் தெரு அருகில், கப்பி சாலையின் ஒரு பகுதி சேதமடைந்தது.

இச்சாலையை தற்காலிகமாக சீரமைக்க, ஊராட்சி சார்பில் ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டன. ஆனால், அடுத்தக்கட்ட பணியை துவக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள், அடிக்கடி பழுதாகின்றன. காலணி அணியாமல் நடந்து செல்வோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே, வேந்தன் நகர் பிரதான சாலையில், சேதமடைந்த பகுதியை உடனே சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தொடர்புடைய செய்தி