செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழி நாடு பேரூராட்சியில் உள்ள 19 ஆவது வார்டு கோட்டைக்காடு கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் மண்பாதையை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் இங்கு சாலை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் சாலை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பொழுது சாலை அமைப்பதற்கான போதிய இடம் கையகப்படுத்த முடியாமல் பலமுறை சாலை அமைக்கும் பணி பாதியிலேயே நின்று போனது.
இந்நிலையில் அந்தப் பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மீண்டும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் சாலை அமைப்பதற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நகர்ப்புற வளர்ச்சி மேம்பாடு திட்டத்தின் மூலம் ₹1கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அந்த தார் சாலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில் அந்த சாலை பலத்தை சேதம் அடைந்து இருந்ததால் பேருந்து சென்று வர மிகவும் சிரமமாக இருந்தது இதனைத் தொடர்ந்து புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில்
மாவட்ட அவைத் தலைவர் இனியரசு, பேரூராட்சி அவைத்தலைவர் அருணா, துணைச் செயலாளர் ரஞ்சித், கவுன்சிலர்கள் சுசிலா ஆறுமுகம், சரண்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.