"மத்திய ரிசர்வ் போலீஸ் படை கொடி அணிவகுப்பு"

79பார்த்தது
"மத்திய ரிசர்வ் போலீஸ் படை கொடி அணிவகுப்பு"
லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதுாரில் மத்தய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப். , 19ம் தேதி நடைப்பெற உள்ள நிலையில், அசம்பாவிதங்கள் தவிர்க்க அனைத்து தொகுதிகளிலும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை துணை கமாண்டன்ட் சதீஷ், ஸ்ரீபெரும்புதுார் ஏ. எஸ். பி. , உதயகுமார் ஆகியோர் தலைமயைில், 85க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் படையினர் மற்றும் போலீசார், ஸ்ரீபெரும்புதுார் ராஜிவ் காந்தி நினைவத்தில் இருந்து, மணிக்கூண்டு, தேரடி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியே மீண்டும் ராஜிவ் காந்தி நினைவகம் வரை கொடி அணிவகுப்பில் ஈடுப்பட்டனர். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி