வித்யாசாகர் குளோபல் பள்ளியில் ஆண்டு விழா

84பார்த்தது
வித்யாசாகர் குளோபல் பள்ளியில் ஆண்டு விழா
செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியின் 16ம் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா, பகவான் அஜித்நாத் சுவாமி அரங்கத்தில், வித்யாசாகர் கல்வி குழுமத்தின் தாளாளர் விகாஸ் சுரானா தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது. பள்ளியின் முதல்வர் டாக்டர் கோவிந்தராஜன் ஆண்டறிக்கை வாசித்தார்.

இதில், தனியார் மருத்துவமனை மருத்துவர் கோபிநாத் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார். விழாவில், மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி