செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் தனியார் திருமண மண்டபத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் சார்பில் பொது குழு கூட்டம் கட்சியின் மாவட்ட தலைவர் முகம்மது ரஃபி தலைமையில் நடைப்பெற்றது மாவட்ட செயலாளர் சம்சுதீன் வரவேற்புரை வழங்க சிறப்பு அழைப்பாளர்களாக மனப்பாறை சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் பொது செயலாளருமான அப்துல் சமது மற்றும் மாநில அமைப்பு செயலாளர் அமீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் கூட்டத்தில் பேசிய பொதுச் செயலாளர் அப்துல் சமது செங்கல்பட்டு மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அறிவிப்பினை வெளியிட்டார் அதனை தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன குறிப்பாக கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் வருகின்ற 6 ஆம் தேதி சென்னையில் நடக்க விருக்கும் ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் சார்பில் திரளான நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் தலைமை பிரதிநிதிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.