ஃபெஞ்சல் புயல் காரணமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரி முழு கொள்ளளவு எட்டியுள்ளது. பல ஆயிரக்கணக்கான பறவைகள் வர தொடங்கியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் உலக பிரசித்தி பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியா, சைபிரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து கூழைக்கடா, அரிவாள் மூக்கன், வர்ண நாரை, மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, சாம்பல் நிற கொக்கு, நத்தக்குத்தி, நாரை, கரண்டி, வாயன், குருட்டு கொக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வந்து இனப்பெருக்கம் செய்துவிட்டு மீண்டும் மே, ஜூன் மாதங்களில் தங்கள் நாட்டுக்கு திரும்பி விடுவது வழக்கம்.
ஏரியில் 9 அடி தண்ணீர் இருந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த மழையால் பறவைகள் சரணாலையை ஏரி முழு கொள்ளளவு எட்டியுள்ளது. சரணாலயத்திற்கு இதனால் வெளிநாட்டு பறவைகள் வர தொடங்கியுள்ளன. தற்போது 11000 க்கும் மேற்பட்ட பறவைகள் சரணாலயத்திற்கு வந்துள்ளதாகவும் மேலும் இன்னும் சில தினங்களில் அதிக அளவு பறவைகள் வரும் என வனத்துறை தெரிவித்துள்ளனர்.