ஊராட்சி மன்ற தலைவரை பொதுமக்கள் முற்றுகை

1074பார்த்தது
ஸ்ரீபெரும்புதூர் அருகே கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட பால்நல்லூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் நேரு குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் சாலை பிரச்சினை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஊதிய பாக்கி, தண்ணீர் பிரச்சினை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இதனிடையே பால்நல்லூர் பகுதியில் வட மாநிலத்தவர் அதிகம் இருப்பதாலும் அவர்கள் அடிக்கடி குட்கா பொருட்கள் பயன்படுத்தி அந்த குப்பைகளை கழிவு நீர் கால்வாயில் போட்டுவிடுவதாகவும் ஆகவே இந்த பகுதியில் குட்கா பொருட்களை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனை கண்டுக் கொள்ளாமல் ஊராட்சி மன்ற தலைவர் நேரு புறப்பட்டதால் பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது மேலும் குட்கா பிரச்சினை குறித்து பேசிய நபரிடம் இதெல்லாம் கடைகாரனிடம் கேளு என்று ஒருமையில் பேசினார் மேலும் ஒரு மாதமாக எங்கள் வீட்டில் குடிநீர் வரவில்லை என்று கூறி ஒருவர் தலைவரிடம் முற்றுகையிட்டதால் ஊராட்சி மன்ற தலைவர் அவரையும் ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி