மதுராந்தகத்தில் பல்லி விழுந்த சாதத்தை சாப்பிட்ட நடத்துனர்

67பார்த்தது
மதுராந்தகத்தில் பல்லி விழுந்த தக்காளி சாதத்தை சாப்பிட்ட அரசு பேருந்து தற்காலிக நடத்துனர்


மயக்கமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதி



செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த கோட்டை புஞ்சை பகுதியை சேர்ந்தவர் முருகன் இவர் மதுராந்தகம் பணிமனையில் தற்காலிக அரசு பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் வழக்கம் போல் பணிக்கு வந்த இவர் மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் உணவகத்தில் தக்காளி சாதம் வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்பொழுது சாப்பாட்டில் இருந்த பல்லி துண்டை எடுத்து கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளார்.

பின்பு சிறிது நேரத்திலேயே நடத்துனர் முருகன் மயக்கம் அடைந்துள்ளார் பின்பு அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் இச்சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி